புல்லாங்குழலோடும் பேஸோடும்(bass)
பாடல் தொடங்குகிறது. புல்லாங்குழல் இல்லை புல்லாங்குழல்கள். மேஜராக ஒலிக்கும் புல்லாங்குழலுக்கு
மேலும் அழகு சேர்க்கும் விதமாக இன்னுமொரு புல்லாங்குழலையும் கோர்த்திருக்கிறார். இப்படியே
வின்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸின் வருடல் 30 நொடிகள் வரை நீள்கிறது.
அதில் லயித்திருக்கும் போதே ஷாஷா திருப்பதியின் செல்லமான அதட்டலுடன் பாடலின் பீட்(beat)
ஆரம்பமாகின்றது. இந்த இடத்திலிருந்து பாடல் வேறு பரிணாமத்திற்கு செல்கின்றது. ரஹ்மான்
அவர்களின் இசையில் நான் பெரிதும் வியக்கும் விஷயங்கள் பலவற்றில் குறிப்பிடத்தக்கது
பீட்(beat) மற்றும் பேஸ்(bass). அவர் ஒவ்வொரு பாடலுக்காகவும்
மெனக்கிடுவதைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் பாடலை பேஸ் மற்றும்
பீட்டிற்காக மட்டுமே எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
இந்தப் பாடலில் இன்னுமொரு புதுமை ஷாஷா திருப்பதி!
குட்டிக் குட்டி சங்கதிகளிலும், ஆங்காங்கே ஆஹா ஓகே என்று சொல்லும் போதும், ஒவ்வொரு
முறை ‘யே மிஸ்டர் மைனர் என்னப் பாக்குற’ என்று பாடும் போதும் - அடடா! காதில் மட்டும் இல்லை உடல் முழுவதும் தேன் பாயும்.
இது போன்ற குரலில் எனக்கு மனைவி கிடைத்தால் வெறும் குரலை மட்டும் கேட்டுக் கொண்டு மூன்று
மாதம் சும்மாவே இருந்து விடுவேன். ஸ்வேதா மேனனின் குரலில் சொக்கிக் கிடந்த எனக்கு ஷாஷாவின்
குரல் வேறு விதமான போதை. இந்தப் பாடலை பேஸ் மற்றும் பீட்டிற்காக மட்டுமே எத்தனை முறை
வேண்டுமானாலும் கேட்கலாம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா, ஷாஷாவின் குரலுக்காகவும்
அவர் பாடிய விதத்திற்காகவும் மட்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ஹரிசரண்
என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நீங்கள் பாடும் போதெல்லாம் ஷாஷா பாடியதையே நினைத்துக்
கொண்டிருக்கிறேன்.
இந்த ஆல்பம் வெளியாகி பத்து நாட்கள் ஆன பின்பும்
கூட இந்தப் பாடலிலிருந்து என்னால் அடுத்த பாடலுக்கு செல்ல இயலவில்லை. பாடல் கேட்ட அடுத்த
நாளே எழுதிய பதிவிது. தாமதத்திற்காக மன்னிக்கவும்.
பாடலில் ஆங்காங்கே ரசித்த சிறு சிறு இடங்களைப் பற்றியும்
எழுத வேண்டுமென்றே தொடங்கினேன். ஏனோ அவ்வுணர்ச்சிகளை எழுத்தில் கொண்டு வர முடியவில்லை.
கேட்டுப் பாருங்க.
மூவி: காவியத்தலைவன்
சாங்: Aye Mr. Minor!மூவி: காவியத்தலைவன்
லிரிக்ஸ்: பா.விஜய்
ஸிங்கர்ஸ்: ஷாஷா டார்லிங், ஹரிசரண்
- த.ராஜன்
No comments:
Post a Comment