என் நண்பன் ஒருத்தன் சொல்வான் - 'பணம் தான் ராஜன்
எல்லாம். சொந்தம் பந்தம் அப்பா அம்மா எல்லாம் ஒண்ணுமே கெடையாது. இவ்வளவு ஏன் ஃப்ரண்ட்ஷிப்
கூட பணம்ன்னு வரும்போது பல்ல இளிச்சிடும்'. இதையெல்லாம் மீறி அன்பு, காதல், பாசம் என்றாலும்
பல சமயங்களில் அவன் சொன்ன வார்த்தைகள் தான் சரியோ என்று தோன்றும். விதிவிலக்குகளை விட்டுவிடுவோம்.
விதிவிலக்குகள் எப்போதுமே விதிவிலக்கு. பணத்தின் முன் எல்லாமே ஆட்டம் கண்டுவிடுமென்பதை
யாரும் மறுக்க முடியாது.
விதவிதமாக ஏமாந்து கொண்டும் ஏமாற்றிக்கொண்டும் வாழ
வேண்டியது தான் தற்போதைய நிலை. இயற்கை. எதார்த்தம். இவ்வளவு ஏன் நம்மை நாமே ஏமாற்றி
தான் வாழ வேண்டியிருக்கிறது. யார் ஏமாற்றுகிறார்கள் யார் உண்மையான அன்பை எதிர்பார்க்கிறார்கள்
என்பதையே பிரித்தறிய முடியாத நிலை. பாதிவிலையில் பொருள் கிடைத்தால் அது தேவையில்லையென்றாலும்
வாங்கிவிடுகிறோம். இதெல்லாம் தவறில்லை என்று மனம் எண்ணும் வரை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே
இருப்பார்கள். நாம் ஏமாறுவது தான் பலரின் முதலீடு. இப்படத்திலுள்ள ஒரு வசனம் - 'நானா யாரயும் தேடி போய் ஏமாத்தல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு
ஒரு வாய்ப்பு கொடுத்தேன்'.
சதுரங்கவேட்டை. இப்படத்தில் என் மனம் கவர்ந்த சில
வசனங்களை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.
ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்கிட்ட
கருணய எதிர்பாக்கக்கூடாது. அவன் ஆசைய தூண்டனும்.
•
ஏமாத்துறது தப்பில்லையா
சார்?
குற்ற உணர்ச்சி இல்லாம
பண்ற எதுவுமே தப்பு இல்ல.
•
பணம் இருந்தா என்ன வேணா
பண்ணலாம்ன்னா அந்த பணத்த சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணாலும் பண்ணக்கூடாது.
•
இந்த சமூகம் நமக்கு என்ன
பண்ணுச்சோ அதத்தான் இந்த சமூகத்துக்கு நாம திரும்ப பண்றோம்.
•
உனக்குலாம் யாருய்யா காந்திபாபுன்னு
பேரு வச்சது?
உண்மையாவும் நேர்மையாவும்
வாழனுங்க்றதுக்காக எங்க அம்மாப்பா வச்ச பேருய்யா.
•
அப்றம் தம்பி. உன் ஹிஸ்டரி
ஜியோகிராபிலாம் என்ன. ஏன் பண்ண?
ஏன் பண்ணேன்னு சொல்றதுக்கு
என்கிட்ட பெரிய கத இருக்கு சார். சொன்னா ஃபுல் கதையையும் கேட்டுட்டு, இப்படி தப்பு
பண்ற எல்லாருக்குமே ஒரு கத இருக்குன்னு சொல்வீங்க. எதுக்கு சார் டைம் வேஸ்ட். பணம்
வேணும். செஞ்சேன். அவ்வளவு தான்.
•
இவ்வளவு பேர ஏமாத்தி உனக்கு
எதுக்குடா இவ்வளவு பணம்?
கோவில்ல விஐபி வரிசைல சாமி
கும்புட பணம் வேணாமா சார்? இப்பலாம் அண்ணன் தங்கச்சி பாசம் அம்மா பையன் பாசம்ன்னு படம்
எடுத்தாகூட க்ளீஷேன்னு சொல்லிட்றாங்க. எப்பவுமே க்ளீஷே ஆகாம இருக்ற ஒரே விஷயம். பணம்
மட்டும் தான்.
•
என் சர்வீஸ்ல இவ்வளவு ஃப்ராட்
பண்றவன இப்பதான் பாக்றேன்.
சார் நான் நல்லவன் சார்.
நீயா?
சார், ஏழையா இருந்து நல்லவனா
இருக்றதுக்கும் பணக்காரனா இருந்து நல்லவனா இருக்றதுக்கும் நெறையவே வித்யாசம் இருக்கு
சார். நான் பணக்கார நல்லவனா இருக்க ஆசப்பட்றேன். இது தப்பா?
•
உன்கிட்ட ஏமாந்தவன நெனச்சிப்பாத்தியா.
எத்தன பேர் ஏமாந்துருப்பான். எவ்வளவு பெரிய பாவம்.
கோழி மேல பரிதாபப்பட்டா
சிக்ஸிட்டிஃபைவ் சாப்ட முடியாது. அப்புறம் நானா யாரயும் தேடி போய் ஏமாத்தல. ஏமாற தயாரா
இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். சொல்லப்போனா இந்த மாதிரி விஷயத்துக்குலாம்
என் மேல கேஸே போடக்கூடாது சார். இப்ப எலெக்ஷன்ல தமிழ்நாட்ட சிங்கப்பூரா மாத்துறேன்னு
ஓட்டு கேட்டு ஜெயிக்றாங்க. அஞ்சு வருஷத்துக்கு அப்புறமும் தமிழ்நாடு தமிழ்நாடாவே தான்
இருக்கு. அப்ப அவங்க நம்மல ஏமாத்திட்டாங்க தான. அவங்க ஏமாத்திட்டாங்கன்னு உங்களால அவங்க
மேல கேஸ் போட முடியுமா சார்?
•
ஏமாறது ஏமாத்துறது இதெல்லாம்
இயற்கையான விஷயம்.
•
சார் நீங்க என்ன அடிக்கலாம்
கொல்லலாம். ஆனா தண்டிக்க முடியாது சார். ஏன்னா நான் ஏழையும் இல்ல முட்டாளும் இல்ல.
•
டேய் ஏன்டா இப்படி பண வெறி
புடிச்சி அலயுற?
சார் என்னைக்காவது பசியோட
இருந்துருக்கீங்களா. இந்த உலகத்துல எல்லாமே இருந்தும் ஆனா எதுவுமே உங்களுக்கு இல்லன்னு
இருந்துருக்கீங்களா. பசிக்காக பயம், கோவம், வன்மம், தனிமை உணர்ச்சி. நமக்கு மட்டும்
ஏன் இப்படி. இந்த உலகத்துல நமக்கு யாருமே இல்ல. இது மோசமான உலகம். உயிர் வாழனும்ன்னா
என்ன வேணா பண்ணலாம்ன்னு கொல வெறியோட இருந்துருக்கீங்களா சார்? உங்க அம்மாவ அடக்கம்
பண்ண ஆயிரம் ரூபா காசு இல்லாம அனாத பொணம்ன்னு கையெழுத்து போட்ருக்கீங்களா சார்?
•
என்ன சார் அவன பத்தியே
யோசிச்சிட்டு இருக்கீங்களா?
இயற்கையோட சமநிலை தவறும்போது
நடக்ற அழிவு மாதிரி. மனுஷனோட சமநிலை தவறும் போதும் நடந்துருது.
•
வாழ்க்கைல பணம் தான் முக்கியம்ன்னு
முடிவு பண்ணிட்ட. ஒரு நாள் பணம் மட்டுமே முக்கியமில்லன்னு தோணும் போது செஞ்ச தப்புக்கெல்லாம்
என்ன பண்ண போற?
ஹா ஹா ஹா. காமெடி பண்ணாதீங்க
சார். அப்படி எதுவுமே நடக்காது. பிகாஸ் மனி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்.
ஹீரோ திருந்தி வாழ நினைப்பது. வாழ விடமால் பழைய
சுழலில் சிக்குவது. கர்ப்பிணி மனைவி. அவளைக் கொல்வதற்காக அருகிலிருக்கும் வில்லன் அவளின்
செயல் கண்டு திருந்துவது என இரண்டாம் பாதி சூர மொக்கை. 'ஹா ஹா ஹா. காமெடி பண்ணாதீங்க
சார். அப்படி எதுவுமே நடக்காது. பிகாஸ் மனி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்.' இந்த வரியோடு படம்
முடிந்திருக்கலாம். அது தான் எதார்த்தம்.
இடைவேளை வரை - 9/10
இடைவேளைக்குப் பிறகு - 1/10
- த.ராஜன்
No comments:
Post a Comment