இந்த ஆறு மாதங்களில் ஆறே படங்கள் தான் பார்த்திருக்கிறேன்.
அதிலொன்று குப்பை. அதை விட்டுவிடுவோம். மீதி ஐந்தைப் பற்றியும் தனித் தனிக் கட்டுரை
எழுத எண்ணியிருந்தேன். இயலாமல் போனது. ஒவ்வொன்றைப் பற்றியும் சிறு அறிமுகம்.
The
Perfume
சாதரணமாக இப்படத்தை அணுகும் போது ‘பெண்களைக் கொன்று
ஃபெர்பியூம் தயாரிக்கிறான்’ இது தான் கதை என்றே தோன்றும். இதுவரை பார்த்தவர்களும் இனி
பார்க்கப் போகிறவர்களும் ஃபெர்பியூமை ‘காதலின் குறியீடாக’ எண்ணி அணுகிப் பாருங்களேன்.
இறுதியில் எல்லோருக்கும் காதலைப் பகிர்ந்துவிட்டு
தன்னோடு அன்பைப் பகிர யாருமில்லாமல் நாயகன் தவிக்குமிடம் நம் இதயத்தை உலுக்கிச் செல்லும்.
Miracle
in Cell No.7
‘I am Sam’ என்றொரு அமெரிக்கத் திரைப்படம் 2011ல்
வெளியானது. அதன் பாதிப்பில் - பாதிப்பு என்பதை விட அதன் காப்பியில் தமிழில் உருவான
திரைப்படம் தான் 'தெய்வத் திருமகள்'. தெய்வத் திருமகளைக் கொண்டாடுபவர்கள் தயவு செய்து
‘I am Sam’ பார்க்கவும்.
அதே கதைக் களம் தான் ‘Miracle in Cell No.7’. ஒரு வேளை ‘I am Sam’-யின் பாதிப்பில் கூட இத்திரைபடத்தை
உருவாக்கியிருக்கலாம். அந்தக் கதையை உள்வாங்கி வேறொரு திரைப்படத்தை எப்படி உருவாக்கியிருக்கிறார்கள்
என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. இப்படத்தை அறிமுகப்படுத்தியவருடன் படம் பார்த்துவிட்டு
வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். தங்கள் அழைபிற்காகவும் காத்திருக்கிறேன்.
Ida
முழுவதும் கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள்.
நீள்வாக்கிலான அசையாத ஃப்ரேம். வெகு சொற்பமான பின்னணி இசை.
கன்னியாஸ்திரி ஆகப் போகும் இளம் பெண் ஒரு புறம்,
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் ஒரு புறம். இருவரும் சந்திக்கும் நிலை உருவாகின்றது.
இருவரும் ஒவ்வொருவரால் இன்ஃப்ளுயன்ஸ் ஆகிறார்கள். இருவருக்குமான முடிவு என்ன என்பது
கதை. Ida தன் தலைமுடியை முதன் முறையாகக் கண்ணாடியில் பார்க்கும் தருணம், ‘தி ஃபெர்பியூம்’ திரைப்படத்தின் இறுதியில் எல்லோருக்கும் காதலைப் பகிர்ந்துவிட்டு
தன்னோடு அன்பைப் பகிர யாருமில்லாமல் நாயகன் தவிக்குமிடத்திற்கு நிகர்.
Whiplash
இசை கற்க விரும்புபவர்களுக்கு ஓரிடத்தில் சலிப்பேற்பட்டு
பாதியில் கற்பதை நிறுத்தி விடும் நிலை ஏற்படும்.
பின்பேதேனும் இசை தொடர்பான உன்னத நிகழ்வைக் காணும் வேளையில் மீண்டும் கற்கத்
தோன்றும் உத்வேகம் தோன்றும். அப்படி ஒரு உன்னதம் இந்த ‘Whiplash’.
இப்படம் பார்த்த பின் இளம் டிரம்மர் (மாணவன்) ஹீரோவாகவும், இன்ஸ்ட்ரக்டர் வில்லனாகவும்
உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் இப்படத்தை அணுகிய விதம் தவறு என்பதை மட்டும் அறிக.
A
Millionaire's First Love
படத்தில் சினிமாத்தனங்கள் ஆங்காங்கே கொட்டிக்கிடந்தாலும்
காதல் மலரும் சில தருணங்கள் அற்புதம். காதலைப் பற்றி என்ன சொல்ல?! பாருங்க பாருங்க.
பாத்துட்டு சொல்லுங்க :)
வாய்ப்பிருந்தால் பின் வரும் காலங்களில் பார்க்கவிருக்கும்
ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் விரிவான பதிவெழுதுகிறேன். இந்த ஐந்து திரைப்படங்கள்
குறித்து விவாதிக்க விரும்புவோர் (படங்கள் பார்த்த பின்) ஆபீஸ் ரூம் வரவும்.
-
த.ராஜன்
No comments:
Post a Comment